தலைவலி நீங்க எளிய வழிகள்
மழை மற்றும் குளிர்காலங்களில் ஸ்வெட்டர்,
தொப்பி போன்றவற்றை அணியாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு
சுக்குக் காபி, இஞ்சி டீ, காய்கறி சூப் ஆகிய சூடான பானங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளித்த பிறகு தலையை காயவைக்க குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்க வேண்டும்.
தலைவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு இலவச
இணைப்பாக சளித்தொல்லையும் கண்டிப்பாக இருக்கும் என்பதால் அதை முதலில் விரட்ட
முயற்சிக்க வேண்டும்.
தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால்
மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இதனால் உடலின்
உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும். தலையில் நீர் கோர்த்துக் கொண்டு
அவதிப்படுபவர்கள் முதலில் சைனஸ் வகைகளில் ஒன்றான Sinusitis
பிரச்னை இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
எனவே, தலையில் அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு
சரியான தூக்கம் அவசியம். இவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பிற
நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளாலும் கூட அலர்ஜி ஏற்பட்டு
தலையில் நீர் கோர்த்துக் கொள்ளலாம். எதனால் இந்தப் பிரச்னை வருகிறது என்பதை
தெரிந்து கொள்ள அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட்டிடம் காண்பிக்க வேண்டும். குறிப்பாக,
காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். அல்லது, மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே இதற்கான மருந்துகளை நாம் தயார் செய்து
கொள்ளவேண்டும் என்று விரும்பினால் அதற்கான சில பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ
குறிப்புகளை இங்கே காணலாம்:-
1. கொத்தமல்லி சாறு எடுத்து
முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.
2. திருநீற்றுப் பச்சிலைச்
சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை
கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.
3. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். தலை பாரமாக இருக்கும் போது
ஆவிப் பிடித்தால், இறுகியிருக்கும் சளியானது இளகி எளிதில்
வெளியேறி, தலை பாரத்தில் இருந்து விடுதலைப் பெறலாம்,
4. கிராம்பை மை போல் அரைத்து
நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.
5. நல்லெண்ணெயில் தும்பை பூவை
போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
6. துளசி இலைகளோடு ஒரு துண்டு
சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.
7. கொதிக்கும் தண்ணீரில்
காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,
8. வெற்றிலை சாறு எடுத்துக்
அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.
9, முள்ளங்கிச் சாறு எடுத்துப்
பருகி வந்தால் தலைவலி குறையும்.
10. கீழாநெல்லிச்சாறு,
குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர
தலைவலி குறையும்,
11. இஞ்சியைத் தட்டி வலி உள்ள
இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.
12. வெற்றிலை,
நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி
தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.
13. சுக்குப் பொடியை பாலில்
குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.
14. மிளகை அரைத்து பாலுடன்
கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.
15. கிராம்பு மற்றும் உப்பை
பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்
16. எலுமிச்சைப் பழச் சாற்றை
இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.
17. தலை பாரத்தை சரிசெய்வதில்
உப்பு ஒரு சிறந்த பொருள். காலை எழுந்த உடன் உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை
கொப்பளிக்க வேண்டும். அதிலும் அந்த நீரை தொண்டையில் வைத்து கொப்பளிக்க வேண்டும்.
இதனால் சளி உடனே வெளியேறி, தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.
18. மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது
தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப்
போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம்
19. மூளை நரம்புகள் சுருங்கி விரியும் தன்மைகொண்டவை. இது அதீதமாகச் செயல்படும்போது
தலைவலி ஏற்படும். இதற்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப்
போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம்
20. செர்ரிப் பழத்தில் `ஆந்தோசயானின்’ (Anthocyanin) என்னும் நிறமி உள்ளது. இது நரம்பு வீக்கத்துக்கு எதிராகச் செயல்படும்
தன்மைகொண்டது. தினமும் காலையில் செர்ரிப் பழத்தைச் சாப்பிடுவதால், மூளை நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
இதனால், காலை அலுவலகத்துக்குச்
செல்லும்போது ஏற்படும் அதீத சத்தம்,
இரைச்சல் மூலம் ஏற்படும் தலைவலியில் இருந்து தப்பிக்கலாம். இது நாளை
இனிமையாகத் தொடங்க உதவும்.
21. மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது பட்டை. தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ
அருந்திவந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.
22. எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. இது நாக்கு
வறளுவதைத் தடுக்கும்; மூளை நரம்புகளைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்.
23. செரிமானக் கோளாறுகளாலும் தலை நரம்புகளில் வலி, வாந்தி வரும் உணர்வு உள்ளிட்டவை ஏற்படும்.
இதற்குச் சீரகம், இஞ்சி, ஓமம் ஆகியவை சிறந்த மருந்துகள். இவற்றில் தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக்
குடித்தால் வலி நீங்கி உடல் புத்துணர்வு பெறும். கிரீன் டீ அருந்துவதும் தலைவலி
போக்க நல்ல வழிமுறை
24. ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இஞ்சியை நசுக்கி அதில் போடுங்கள். 10 நிமிடம் நன்றாக கொதிக்க
வையுங்கள். பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, அதனை வெதுவெதுப்பாக பருகவும். வலி சட்டென
விட்டுவிடும்.
25. பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நிவாரணம்
கிடைக்கும்.
இவ்வாறு பல வழிகள் உள்ளன. நமக்கு ஏற்ற
வழிகளை தேர்வு செய்து தலைவலியை விரட்டி நலம் பெறுவோம்..